விபச்சாரி என்ன செய்கிறாள் ?

விபச்சாரி என்ன செய்கிறாள் ? பக்தி எப்படி இருக்க வேண்டும்!

அவளின் மனமும் உடலும் ஒன்று சேர்வது இல்லை.  மனம் கிடைக்கப் போகும்  பணத்தில் இருக்கிறது. உடல் ஏதோ செய்து கொண்டு இருக்கிறது.

பக்தி அப்படி இருக்கக் கூடாது.

மேலும், ஒரு விபச்சாரி அற்ப பணத்திற்கு தன் விலை மதிக்க முடியாத தன்மானத்தை விற்கிறாள்.

நாம் அவளை விட எந்த விதத்தில் உயர்வு ?

பணத்திற்காக , நம் வாழ் நாள் பூராவும் ஏதோ ஒரு அலுவலகத்தில் , யாருக்கோ,  எதையோ செய்து  கொண்டிருக்கிறோம். செய்யும் வேலையில் எவ்வளவு தூரம்   மனம் ஒன்றிச் செய்கிறோம்.

மனமும் உடலும் ஒன்றாகச் சேராத எந்த வேலையும் ஒரு விபச்சாரியின் வேலைதான்.

"தனி இடத்தை நாடி" - கூட்டம் மனதை சிதற அடிக்கும். மனதை ஒரு நிலை படுத்த  உதவாது. எனவே, தனிமையை நாடி.

"மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்" - ஜனக் கூட்டம் நம்மை ஒவ்வொரு பக்கம்  இழுக்கும். பிள்ளைகள் ஒரு பக்கம், மனைவி/கணவன் ஒரு பக்கம்,  நண்பர்கள் ஒரு பக்கம், உறவு ஒரு பக்கம் என்று நம்மை நாலா பக்கங்களிலும்  இழுத்து அலைகழிக்கும்.

உண்மையைத் தேட வேண்டும் என்றால் இந்த அலைவுகளில் இருந்து விடுபடவேண்டும்.

எனவே மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்.

அதற்காக காட்டுப்  போ  என்று சொல்லவில்லை.

மக்களை கண்டு  ஓடி விடு என்று சொல்லவில்லை.

மக்களைத் தேடி நீ ஓடாதே. அவர்கள் வந்தால் மகிழாதே. வரவில்லை என்றால்  துக்கம் கொள்ளாதே.

கூட்டத்தில் பெரிய இன்பம் இல்லை என்று சொல்கிறது கீதை.

அதில் இன்பம் என்று நினைத்தால் அதன் பின்னே மனம் போகும். பின் உண்மையை எங்கே  தேடுவது ?

வேற்றுமையுருபு ஏற்றல்
விபச்சாரி + ஐ    விபச்சாரியை
விபச்சாரி + ஆல்    விபச்சாரியால்
விபச்சாரி + ஓடு    விபச்சாரியோடு
விபச்சாரி + உடன்    விபச்சாரியுடன்
விபச்சாரி + கு    விபச்சாரிக்கு
விபச்சாரி + இல்    விபச்சாரியில்
விபச்சாரி + இருந்து    விபச்சாரியிலிருந்து
விபச்சாரி + அது    விபச்சாரியது
விபச்சாரி + உடைய    விபச்சாரியுடைய
விபச்சாரி + இடம்    விபச்சாரியிடம்
விபச்சாரி + (இடம் + இருந்து)    விபச்சாரியிடமிருந்து