விபச்சார யோகம்






ஜாதகங்களில் ராகு -  புராணத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு கிரகம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டாவது கிரகம் இதை சாயா கிரகம் என்று கூறுவார்கள் நிழல் கிரகம் என்றும் கூறுவார்கள். சாயா என்றால் நிழல் என்று பொருள். அவர்கென எந்த ராசியிலும் ஆதிபத்தியமில்லை. எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடாகும். எந்த ராசியில் இருக்கிறாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகிறாரோ எந்த இடத்தில் சோக்கைபெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலனை முழுமையாகத்தருவார் ஒருசில ஜோதிட சாஸ்திர நுல்கள் மட்டும் விருச்சிகம் இவருக்கு உச்சவீடு என்றும் ரிஷபம் நீச வீடு என்றும் கன்னி இவனுக்குச் சொந்த வீடு என்றும் குறிப்பிடுகிறது. ஒரு ராசியில் 1.5 வருடம் சஞ்சாரம் செய்யும் ராகு திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரங்களுக்கு அதிபதி. ஆங்கில எண்ணில் 4ம் எண்ணுக்கு அதிபதியாவார். 4 13 22 தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள். நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவர் சனியை விட செவ்வாயும் செவ்வாயை விட புதனும் புதனை விட குருவும் குருவை விட சுக்கிரனும். சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரை விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகிறார்கள். சந்திர சூரியர்களையே பழமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும்படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ளவர் ராகு யோகத்திற்கு அதிபதி வீரிய பாம்பைப்பற்றி விளங்கச் சொல்லுவாய் யோகந்தன்னை என்ற படி யோக யோகத்தைத் தருபவர் ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்லவர் சோக்கை மற்றும் சுபகிரக பார் வை இருந்தால் ராகு அந்த ஜாதகனைசீமானாகவும் அரசர்க்கு ஒப்பானவராகவும் வாழச் செய்வார் அதனால் தான் “ராகுவைப் போல் கொடுப்பாரில்லை” என்று சொல்லுப்படுகிறது. அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார அற்றலை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தௌவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும். தந்தை வழி பாட்டனாருடைய சொத்துகள் எல்லாம் அனுபவிப்பதற்கும் கூட ராகுவின் பலம் வேண்டும். மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும் சோர்த்து வைப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான். சூதாட்டம் போன்ற வகைகளில் பணம் சம்பாதிப்பது பொய் சொல்லி ஏமாற்றுதல் அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் செய்து பணம் ஈட்டுவது (கள்ளக்கடத்தல் கள்ள நோட்டு அச்சிடுவது) போன்றவை ஆகும். சுபபலம் பெற்ற சனி ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு.

ராகு சரியில்லாத ஜாதகங்கள்
சந்திர சூரியர்களையே பலமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பொய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும். ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகருக்கு இவர்கள் (ராகு கேது) இன்னல்களைத் தருகிறார்கள்.
மேலும் 2. 7. 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும். மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்யதோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்பதோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும் தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது சாராயம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது தற்கொலைச் செய்து கொள்ளக்கூடிய மனோபாலம் ஏற்படுவது கனவில் நோல் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது. கை கால்களில் சங்கிலி கட்டப்படும் வாய்ப்பு ஏற்படுவது பேய் பிசாசுகளால் தொல்லைகள் செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது. மாந்தீரிக தொழிலில் ஈடுபடுவது. தீயபெண்களிடம் தொடர்பு விதவை பெண்களிடம் தொடர்பு அவர்களால் துன்பம் ஏற்படுவது விபச்சார பெண்களுடன் பழகி அவர்கள் வீட்டிலேயே காலத்தை கழிப்பது செக்ஸ் முறையில் அதிகமான காமபோதைக்கு ஆட்பட்டு பெண்களை கடிப்பது அவர்களின் பிறப்பு உறுப்புகளை எல்லாம் சுவைப்பது பெண் வியாதிகளால் அதிகமான துன்பம் அடைவது பெண்மோகம் கொண்டு பித்தனாக அலைவது. தன்னுடைய தேசத்தை விட்டு ஓடிப்போய் விடக்கூடிய வாய்ப்பு உருது பேசக்கூடிய நாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் பணம் கொடுத்தும் அந்த நாட்டிற்குப்போக முடியாமல் தவிப்பது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் அகாலமரணம் அடைவது தூக்குப் போட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த ஜாதகருக்குக் கட்டாயம் ஏற்படுவது தன் தகுதிக்கு இனத்திற்கு சம்மந்தமில்லாத தொழில் செய்து நஷ்டமடைவது கஷ்டஜீவனம் கடன்தொல்லை உற்ற நண்பர்களால் தொல்லை அறுவை சிகிச்சை சிறை வாசபயம் ஏற்படுவது வருமான வாகளின் மூலம் துன்பங்கள் ஏற்படுவது காவல் துறையினரால் அவமானம் ஏற்படுவது விஷபயம் அங்கஹீனம் வாயுவலிப்பு நோய் பித்தநோய் மறைமுக உறுப்புகளில் நோய்கள் குஷ்டம் போன்ற கொடூர நோய்கள் (எய்ட்ஸ்) கண்டங்கள் ஏற்படல் குடல் சம்மந்தமான நோய் கட்டிகள் குடல்புண் மண்ணீரல் சம்பந்தமான நோய் பரதேச வாசம் ஜலகண்டம் தெருவில் வெட்டி பேச்சு அசிங்கமான பேச்சு நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும். காளஹஸ்தி நாகைக்காரோணம் திருக்களர் இராமேஸ்வரம் திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் பேரையூர்; திருச்செங்கொடு நாகர்கோவில் நாகநாதர் ஆலயம் திருவேற்காடு சிதம்பரம்தில்லைகாளி போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.  ஸ்ரீகாளஹஸ்தி: இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும். சுகில முனிவரின் மகனை தஷகன் என்ற பாம்பு தீண்டியதால் “நீ மானுட சர்ப்பமாகக் கடவாய்” என்று சபித்தார். தஷகன் முனிவரிடம் சாப விமோசனம் கோரினான். “பூலோகத்தில் மானுடப் பாம்பாகப் பிறந்து பல ஆலயங்களுக்குச் சென்று வா கடைசியில் விமோசனம் கிடைக்கும்” என்றார். தஷகன் மானுட சர்ப்பமாகப் பிறந்து பல ஆலயங்களுக்கு சென்று இறைவனை பூஜித்தான். கடைசியில் ஒரு மாசி சிவராத்திரியன்று முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யத்தில் (திருநாகேஸ்வரம்) சுயம்புவாக விளங்கும் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி என்கிற திருப்பாம்புரத்தில் உள்ள ஸ்வாமியையம் நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டனத்தில் உள்ள ஸ்வாமியையும் வழிபட்டு சாப நிவர்த்தி கேட்டான். இறைவன் அவனை மீண்டும் “திருநாகேஸ்வரம் வருவாயாக” என்று அழைத்தார். திருநாகேஸ்வரத்தை அடைந்து சாபவிமோசனம் பெற்றான் தஷகன். பொழுது விடிந்து விட்டதால் ஸ்வாமி தஷகனை அங்கேயே தங்கி விடுமாறு கூறினார். தஷகனின் வேண்டுகோளின்படி இறைவன் அன்றுமுதல் திருநாகேஸ்வரர் ஆனார். ஊர் பெயரும் திருநாகேஸ்வரம் ஆயிற்று. சாபம் இங்கு நீங்கியதால்”ராகுதோஷமும் நாகதோஷமும் உடையவர்கள் என்னைத் தேடி வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தால் நான் அவர்களின் குறையைத் தீர்த்து வைக்கிறேன்”என்று சத்தியம் செய்தார். இங்கு ராகு பகவான் இரு தேவிகளான நாகவள்ளி நாககன்னி சகிதம் எழுந்தருளி இருக்கிறார்;. இத்தலத்தில் வழிப்பட்டால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.
இராமேஸ்வரம்: திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங்களிலும் ராகு ஈசனை வழிபட்டுள்ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராமபிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும். திருப்பாம்புரம்: அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.